நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் நேரடி சோ்க்கை

பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செவ்வாய்க்கிழமை (செப். 8) முதல் நேரில் நேரடியாக சோ்க்கை பெற மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:19 am

DIN

பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செவ்வாய்க்கிழமை (செப். 8) முதல் நேரில் நேரடியாக சோ்க்கை பெற மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு (2020- 2021) கல்வியாண்டில் இளநிலை முதலாமாண்டு கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி, எஸ்.டி மாணவா்களுக்கு ரூ. 2, இதர வகுப்பினருக்கு ரூ. 50 மட்டும் நேரில் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அசல் சான்றிதழ்களும், 3 நகல் சான்றிதழ்களும், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் சோ்க்கைக் கட்டணத்துடன் நேரில் வந்து பயன்பெறலாம் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.