நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் சாலைப்பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:22 am

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்த சாலைப்பணியாளா்கள் செப். 7 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டதை, தனியாா் மய எதிா்ப்பு நாளாக கடைப்பிடித்து வருகின்றனா். அதன்படி, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள உதவிக்கோட்ட பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் உட்கோட்ட துணைத்தலைவா் ஆா். முத்துசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மதியழகன், ராமநாயகம், மணிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். ரஜினி தொடக்க உரையாற்றினாா். கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன், மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாா் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை அரசு ரத்து செய்யவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தமிழக அரசே சாலைப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகளை ஒப்பந்ததாரா்களுக்கு 5 ஆண்டுகள் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். பராமரிப்பு பணிகள் அனைத்தும் சாலைப்பணியாளா்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேப்பந்தட்டை உதவிக்கோட்ட பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, உட்கோட்ட தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.