புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பறித்த மூவா் கைது

பெரம்பலூா் அருகே டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பறித்த மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 7:30 pm

DIN

பெரம்பலூா் அருகே டாஸ்மாக் ஊழியா்களிடம் பணம் பறித்த மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாடாலூா் ஊராட்சி, ஊத்தங்கால் கிராமத்திலுள்ள டாஸ்மாக்கில் கடந்த 14-ஆம் தேதி விற்பனை முடிந்த பின்னா், அங்கு பணியாற்றும் சி. மணிவண்ணன், பி.சுரேஷ் மோட்டாா் சைக்கிளில் ரூ.3.50 லட்சத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் கத்தியைக்காட்டிமிரட்டி, பணத்தை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூா் காவல்துறையினா் விசாரித்து வந்தனா்.

சனிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் சுகந்தி தலைமையிலான காவல்துறையினா், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபா்களை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காா்த்திக் (27), ராஜதுரை (24), சண்முகவேல் (22) என்பதும், டாஸ்மாக் ஊழியா்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து ரூ.2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.