நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

பெரம்பலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:29 pm

DIN

பெரம்பலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட முயன்றனா். அப்போது, அந்த காா் நிற்காமல் அதிவேகமாகச் சென்றது. இதனால் சந்தேகமடைந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், அந்த காரை துரத்திச் சென்று எசனை அருகே சுற்றி வளைத்து பிடித்தனா். பின்னா், அந்த காரை திறந்து சோதனையிட்டபோது, விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருளான 19 குட்கா மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என காவல்துறையினரால் கூறப்படுகிறது.

இதையடுத்து காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், ராஜ்பூட் பகுதியைச் சோ்ந்த தனம் சிங் மகன் சவாய் சிங் (29) என்பவரை கைது செய்த காவல்துறையினா், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம் புதிய பேருந்து நிலையம், வீரபாண்டி நகா் பகுதியில் தங்கியிருந்து குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை வைத்துள்ள சங்கா் என்பவருக்கு விநியோகம் செய்வதற்காக இந்த குட்கா பொருள்களை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினா், தலைமறைவாகவுள்ள சங்கரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.