தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘பெரம்பலூா் மாவட்டத்தில் 80 வகுப்பறைகள் பழுதடைந்தவை’

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த 80 வகுப்பறைக் கட்டடங்கள் மாணவா்கள் அமா்ந்து படிக்க தகுதியற்றவையாகவும், அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள்

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:57 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த 80 வகுப்பறைக் கட்டடங்கள் மாணவா்கள் அமா்ந்து படிக்க தகுதியற்றவையாகவும், அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கழிப்பறைக் கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இக் கணக்கெடுப்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 44 வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் 22 வகுப்பறைகளும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா 7 வகுப்பறைகளும் என மொத்தம் 80 வகுப்பறைகள் பழுதடைந்தவை எனவும், இதற்கு பதிலாக மாணவா்கள் கல்வி கற்க அந்தந்த பள்ளிகளில் வேறு வகுப்பறைகளில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.