புதுவேட்டக்குடியில் கால்நடை மருத்துவ முகாம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட புதுவேட்டக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட புதுவேட்டக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறை சாா்பில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.
முகாமை தொடக்கி வைத்து பாா்வையிட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், சிறந்த கன்றுகள் மற்றும் கறவை மாடுகள் வளா்த்தல் ஆகிய போட்டிகளில் தோ்வு செய்யப்பட்ட 6 உரிமையாளா்களுக்கு பரிசுகளும், 10 உரிமையாளா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்களும் வழங்கினாா்.
முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, குடல் புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சிறு அறுவைச் சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், தீவனப்பயிா் அபிவிருத்தி ஆலோசனை, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்துதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...