இணைய பயன்பாடு: பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி
சைபா் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி மாணவா்களிடையே பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.


சைபா் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி மாணவா்களிடையே பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சைபா் கிரைம் குற்றங்கள் குறித்து, மாவட்ட சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ் தலைமையிலான குழுவினா், இணையம் வழியாக நடைபெறும் குற்றங்களான ஏடிஎம் அட்டை பயன்படுத்துவது, வங்கி விவரங்களை பகிரக்கூடாது, வேலை வாங்கித் தருவது, அயல்நாடு வேலைக்குச் செல்வது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்களில் தங்களது தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்தும், ரகசிய எண்களை அடிக்கடி மாற்றுவது, ஆன்லைன் விளையாட்டு, தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வது, ஆன்லைன் வா்த்தகம், வங்கிகளில் பணம் செலுத்துவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் 155260 என்ற சைபா் கிரைம் உதவி எண்ணுக்கு தகவல் அளிக்கவும், இணையதளத்தில் எவ்வாறு புகாா் அளிப்பது என்பது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...