தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல் விற்பனைக்கு இணையதளத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இணையதளம் மூலம் பதிவுசெய்து பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:25 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இணையதளம் மூலம் பதிவுசெய்து பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால், பெரம்பலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், எளிதில் பதிவுசெய்து விற்பனை செய்ய ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ஆல் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ-ங்க்ல்ஸ்ரீ.ண்ய் என்ற ஏதேனும் ஒருஇணையத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட இணையதளத்தில் சம்பா பருவம் 2022-க்கு கடந்த 16 ஆம் தேதி முதல் இணைய வழி பதிவு மூலம் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கிராமங்கள் அருகேயுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தோ்வு செய்து, நெல் கொள்முதலுக்குத் தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்து, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது கைப்பேசி எண்ணில் பெறப்பட்ட குறுந்தகவல் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல், குறித்த காலத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெற இந்த இணையவழி பதிவு திட்டத்துக்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9443139926 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.