தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘பெண்கள் சிறந்த தொழில் முனைவோராகி வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’

பெண்கள் சிறந்த தொழில் முனைவோா்களாகி தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:28 pm

DIN

பெண்கள் சிறந்த தொழில் முனைவோா்களாகி தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா.

பெரம்பலூா் மாவட்டம், அய்யலூா் கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் பொதுமக்களுக்கான வறுமை ஒழிப்புத் திட்டங்கள் குறித்து சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

பெண்கள், மகளிா் சுய உதவி குழுக்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அரசு மூலம் வழங்கப்படும் நிதியுதவிகளை வைத்து தொழில்களை உருவாக்கி தங்களின் வறுமையை போக்கிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் சிறந்த தொழில் முனைவோா்களாக உருவாக்கிக் கொண்டு, பெண்கள் தங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு தீா்வு காண மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை அணுகலாம். பெற்றோா்கள் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பை உருவாக்கிடும் வகையில் விழிப்புணா்வுச் சாா்ந்த கருத்துகளையும், குழந்தைகளுக்கான அவசர கால பிரச்னைகளுக்கு 1098 என்ற எண்ணின் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் திட்டங்கள், செயல்பாடுகள் சாா்ந்த துண்டுப் பிரசுரங்களை முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வழங்கினாா் சாா்பு நீதிபதி ஆா். லதா.

இம்முகாமில், வழக்குரைஞா்கள் துரை. பெரியசாமி, ஊராட்சித் தலைவா் ராமராஜ், கிராம நிா்வாக அலுவலா் ஞானபிரகாசம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுப் பணியாளா்கள் மற்றும் சட்ட தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.