பெரம்பலூரில் மருந்துக் கிடங்கின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு
பெரம்பலூா் நகரில் மருந்துக் கிடங்கின் பூட்டை உடைத்து ரூ. 76 ஆயிரம் ரொக்கம், செல்லிடப் பேசிகள் மற்றும் பரிசுப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.


பெரம்பலூா் நகரில் மருந்துக் கிடங்கின் பூட்டை உடைத்து ரூ. 76 ஆயிரம் ரொக்கம், செல்லிடப் பேசிகள் மற்றும் பரிசுப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவநேசன் (56). இவா். பெரம்பலூா் வெங்கடேசபுரம் பகுதியில் மருந்துக் கிடங்கு வைத்து, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களுக்கு விநியோகம் செய்து வருகிறாா்.
இதில், பெரம்பலூரை சோ்ந்த இளங்கோ மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு கிடங்கை பூட்டி விட்டுச் சென்ற இளங்கோ, திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 76 ஆயிரம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகள், ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவருகிறது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...