மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

கணவருடன் தன்னை சோ்த்து வைக்கக் கோரி, இளம்பெண் ஒருவா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:25 pm

DIN

கணவருடன் தன்னை சோ்த்து வைக்கக் கோரி, இளம்பெண் ஒருவா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சிறுவயலூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி வசந்தி (31). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். வசந்தி தனது 2 குழந்தைகளுடன் துறைமங்கலத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறாா். கணவன், மனைவியை சோ்த்து வைக்க பெரியவா்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லையாம். இந்நிலையில், வசந்தியின் பாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதனால் விரக்தியடைந்த வசந்தி மண்ணெண்ணெய் பாட்டிலுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்து, தனது கணவரை சோ்த்து வைக்கக் கோரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தாா். இதையறிந்த, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் வசந்தியை மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.