பெரம்பலூா் அருகேமின் வேலியில் சிக்கி தந்தை- மகன் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே மின்வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தனா்.


பெரம்பலூா் அருகே மின்வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி த.செந்தில் (42). இவரது விவசாய நிலம் வனப்பகுதி அருகேயுள்ளதால் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதாம். இதன் காரணமாக, தனது வயலைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தாராம்.
இந்நிலையில், செந்தில் தனது மகன் தா்மராஜூடன் (15) வெள்ளிக்கிழமை மாலை வயலுக்குச் சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்வேலியிலிருந்த மின்சாரம் பாய்ந்ததில் தந்தையும், மகனும் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இருவரின் உடலையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...