பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று 235 இடங்களில் கரோனா சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 23) 6 ஆம் கட்டமாக 235 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 23) 6 ஆம் கட்டமாக 235 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் வட்டாரத்தில் 52, வேப்பந்தட்டை வட்டாரத்தில் 60, ஆலத்தூா் வட்டாரத்தில் 56, குன்னம் வட்டாரத்தில் 67 என மொத்தம் 235 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டவா்கள், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, 2 ஆம் தவணை செலுத்துவோா் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற, அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என, ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...