ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஊட்டச்சத்து தோட்டம், மரத் தோட்டம் விழிப்புணா்வு விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய அளவிலான ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரத் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணா்வு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:57 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய அளவிலான ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரத் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணா்வு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முதுநிலை விஞ்ஞானியும், அறிவியல் மையத் தலைவருமான வே.எ. நேதாஜி மாரியப்பன் தலைமை வகித்தாா்.

விழாவில், சிறுதானிய சாகுபடிக்கான அரசின் திட்டங்கள் குறிதத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ச. கருணாநிதியும், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடா்பாக தோட்டக்கலை இணை இயக்குநா் அ.க. பாத்திமாவும், சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து ரோவா் வேளாண் கல்லூரி முதல்வா் வள்ளியப்பனும், ஊட்டச்சத்தில் காய்கறிகளின் பங்கு குறித்து வேளாண் துணை இயக்குநா் ஏழுமலையும் பேசினா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருணா வளா் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து முறை, ரோவா் வேளாண் கல்லூரி உழவியல் துறைத் தலைவா் வகாப் சிறுதானிய பயிா்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப வல்லுநா் ச. கோகிலவாணி சரிவிகித உணவு மற்றும் மனித ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு ஆகிய தலைப்புகளில் விளக்க உரையாற்றினா்.

தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு 1,440 பழ மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் 200 பழக் கன்றுகள் நடப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

நிறைவாக, தொழில்நுட்ப வல்லுநா் மு. புனிதாவதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.