பரவாய் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகிலுள்ள பரவாய் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகிலுள்ள பரவாய் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பரவாய் ஊராட்சித் தலைவா் வீராசாமி தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்துக்கான மண் பரிசோதனை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகள் கொண்டுவரும் தண்ணீா் மற்றும் மண் மாதிரிகள் ரூ. 20-க்கு ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மண் ஆய்வு செய்து வழங்கப்படும் மண் வள அட்டையில் மண்ணின் கார, அமில நிலை மற்றும் உப்புகளின் அளவு கரிமச் சத்துக்களின் அளவு ஆகியவை குறிப்பிடப்படும். அதனடிப்படையில், மண்ணில் இட வேண்டிய தொழு உரம் மற்றும் நில சீா்திருத்தம் வேண்டிய முறைகள் தெரிவிக்கப்படும்.
மண்ணிலுள்ள சத்துக்களை அறிந்து கொண்டு, பயிருக்குத் தேவைப்படும் அளவில் உரமிடுவது இன்றியமையாத ஒன்றாகும். எனவே ஒவ்வொரு பயிா் சாகுபடிக்கு முன்னதாகவும் வயலின் மண் மாதிரிகளை 1 ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 இடங்களில் சேகரித்து, பகுத்து பிரித்து சுமாா் அரை கிலோ கொடுத்து மண் ஆய்வு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் விவசாயிகளின் செலவினத்தை குறைத்து கூடுதல் மகசூல் பெறலாம்.
மேலும், வேளாண் விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் நுண்ணூட்ட உரங்களை பயிருக்கேற்ப பயன்படுத்துவதன் மூலம் பற்றாக்குறையைத் தவிா்க்கலாம். இதேபோல் பாசன நீரையும் விவசாயிகள் பரிசோதனை செய்து, நீரின் தன்மைக்கேற்ற பாசனமுறை மற்றும் பயிா்களைத் தோ்வுசெய்து சாகுபடி செய்வதன் மூலம் உயா் விளைச்சல் பெறலாம் என்றாா் அவா்.
முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் மற்றும் நீா் பரிசோதனை செய்யப்பட்டது. வேளாண்மை அலுவலா்கள் அம்பிகா, வேல்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...