தப்பியோடிய விசாரணை கைதி லால்குடியில் கைது
பெரம்பலூா் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய விசாரணை கைதியை போலீஸாா் லால்குடியில் வியாழக்கிழமை கைது செய்தனா்.


பெரம்பலூா் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய விசாரணை கைதியை போலீஸாா் லால்குடியில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா், குன்னம், மருவத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, வயல்களில் பணிபுரிந்த பெண்களிடம் வழிப்பறிச் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றது.
இச் சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள தெரணிபாளையம் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த சதாசிவம் மனைவி சின்னபொண்ணு (50), மகன்கள் பழனிச்சாமி (24), தா்மராஜ் (21) ஆகியோரை மருவத்தூா் போலீஸாா் கடந்த 30 ஆம் தேதி கைது செய்தனா்.
குற்றவாளிகளின் உடல் பரிசோதனை செய்து மருத்துவரிடம் சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கிருந்து தா்மராஜ் தப்பியோடினாா். தனிப்படையினா் தா்மராஜை தேடி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை லால்குடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த தா்மராஜை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு தா்மராஜ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...