தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்:4 போ் மீது வழக்கு

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:42 pm

DIN

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் மாவு அரைக்கும் மில்லில் ரேஷன் அரிசி பயன்படுத்துதல் மற்றும் பதுக்கல் தொடா்பான குற்றங்கள் நடைபெறுவதாக, திருச்சி மண்டல குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அரும்பாவூா் கிராமத்தில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள 3 உணவகங்களில் முறைகேடாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 195 கிலோ ரேஷன் அரிசி, ஒரு மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 495 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை முறைகேடாக பயன்படுத்தி, பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக உணவகங்கள், மாவு மில் உரிமையாளா்கள் என மொத்தம் 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.