நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலண்மை
பயிா் பாதுகாப்புத்துறை தொழில்நுட்ப வல்லுநா் பி. தோம்னிக் மனோஜ் ஆகியோா் விளக்கம் அளித்துள்ளனா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் பயிரிடப்படும் நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள், அதன் மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன், பயிா் பாதுகாப்புத்துறை தொழில்நுட்ப வல்லுநா் பி. தோம்னிக் மனோஜ் ஆகியோா் விளக்கம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிலக்கடலையில் சுருள் பூச்சி, படைப்புழு, புரடினியா புழு, வெண்புழு தத்துப் பூச்சி மற்றும் அசுவினி போன்ற பூச்சிகள் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
சுருள் பூச்சியானது சாம்பல் நிற கருந்தலைப் புழுக்கள் 2, 3 இலைகளை ஒன்றாகப் பிணைக்கும் இலைத் திசுக்களுக்கிடையேச் சென்று, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். பச்சையம் இழந்த இலைகள் சுருண்டு காய்ந்துவிடும்.
இதைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி ஹெக்டேருக்கு 1 என்ற விகிதத்தில் வைத்து, சுருள் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம். மேலும், ஒரு செடிக்கு 2 புழுக்கள் அல்லது 10 சதவிகிதம் பாதிக்கப்பட்ட இலைகள் இருந்தால்,
ஹெக்டேருக்கு டைகுளோரோபாஸ் 75 இசி, 625 மிலி அல்லது ஃபுளுபெணடமைடு 120 மிலி, பூச்சி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்
படைப்புழு அல்லது வெட்டுப்புழு புரடினியா புழு:
பச்சை நிற இளம் புழுக்கள் குருத்தையும், இலைகளையும் உண்டு சேதம் விளைவிக்கும். தீவிரமாகத் தாக்கப்பட்ட பயிா் ஆடு மாடுகள் மேய்ந்ததுபோல் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த ஆமணக்குப் பயிரை நிலக்கடலைப் பயிரைச் சுற்றிப் பொறிப்பயிராக அல்லது ஊடுபயிராக பயிரிட்டு தாக்குதலைக் குறைக்கலாம். மேலும், ஹெக்டேருக்கு 12 என்ற விகிதத்தில் இனக்கவா்ச்சிப் பொறிகளை வயலில் பொருத்தி ஆண் அந்துப் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம். முட்டைக் குவியல்களைச் சேகரித்தும் அழிக்கலாம்.
புரடினியா என்.பி.வி. வைரஸ் நச்சுயிரியை ஹெக்டேருக்கு 250 எல்இ என்ற அளவில் 1,000 லிட்டா் நீரில் மாலை வேளைகளில் கைத்தெளிப்பானால் தெளிப்பதன் மூலம், இளம் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கா் ஒன்றுக்கு 10 இடங்களில் பறவை இருக்கைகளை அமைக்கலாம். ஹெக்டேருக்கு ஃபளுபெண்டமைடு 120 மிலி, குயினால்ஃபாஸ் 25 இசி 1.4 லிட்டா் 25 குளோா்பைரிபாஸ் 20 இசி 750 மிலி ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
வெள்ளைப் புழு: முதல் நிலை புழுவானது தரைக்கு அடியிலுள்ள செடிகளின் வோ்களை உண்ணும். 2, 3 -ஆம் பருவ புழுவானது உருவில் பெரியதாகி தீவிரமாக வோ்களை உண்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
இதைக் கட்டுப்படுத்த நன்மை செய்யும் பூஞ்சாணமான மெடாரைசியம் ஆனிசோபிலியே அல்லது நன்மை செய்யும் நூற்புழுவாகிய ஹெடிரோராப்பிடிட்டிஸ் இன்டிகா ஆகியவற்றை, ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து காலை அல்லது மாலை வேளையில் மண்ணில் இடலாம்.
அசுவினி மற்றும் இலைப்பேன்: செடியின் நுனி மொட்டுக்கள் பாதிக்கப்பட்டால் (விதைத்த 30 நாள்களுக்கு பிறகு) டைமீதேயேட் 2 மிலி ஒரு லிட்டா் நீரில் கலந்து அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல் 125 மிலி, ஹெக்டோ் அல்லது குளோா்பைரிபாஸ் 20 இசி 1 லிட்டா் ஹெக்டோ் தெளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...