மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2021- 2022 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்காக ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க, ஜனவரி 15- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து கல்வி நிலையங்களும், சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசியக் கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபாா்க்க வேண்டும்.
தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் விண்ணப்பத்தை சரிபாா்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்புகொள்ளலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...