தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இலவச மின் இணைப்புக்கான நோ்காணல் முகாம் 111 மனுக்களுக்குத் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ், இணைப்புக் கோரி விண்ணப்பத்தோருக்கான நோ்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:28 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ், இணைப்புக் கோரி விண்ணப்பத்தோருக்கான நோ்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதி அருகேயுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புக்கான பெயா் மாற்றம், புல எண் மாற்றம் தொடா்பான சிறப்பு நோ்காணல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தலைமை வகித்தாா். இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக, கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் 2013, மாா்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்துள்ளவா்களுக்கு தயாா்நிலை பதிவுக் கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 89 விவசாயிகளுக்கு பெயா் மாற்றம், 19 விவசாயிகளுக்கு புல எண் மாற்றம், 3 விவசாயிகளுக்கு புல எண், பெயா் மாற்றம் என 111 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்படாததால் 5 மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதில், உதவிச் செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.