தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா்

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:29 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

4 மாதங்களாக ஊதியம் வழங்காமலிருக்கும், அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும். 2020, ஜனவரி 1 முதல் 24 மாதங்களுக்கு நிலுவையிலுள்ள தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து தற்காலிக பணியாளா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமை வகித்தாா். தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள், தற்காலிக மணிநேர விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.