மருத்துவக் கல்லூரித் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து, பொருளாளா் ஏ. ஆதிசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் மாணிக்கம் ராமசாமி சங்கத்தின் செயல்பாடுகள், அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
இக்கூட்டத்தில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை நிகழாண்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்தியதற்கும், அரசு ஊழியா்களில் சி, டி பிரிவினருக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்கியதற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் பி. செங்கமலை, பி. சிவலிங்கம், ஏ. பெரியசாமி, எம். தங்கையன், ரெங்கநாயகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, தலைமை நிலையச் செயலா் கே. மணி வரவேற்றாா். நிறைவில், மாவட்ட இணைச் செயலா் ஆா். திரவியம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...