கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு ஊழியா்கள்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் கோரிக்கை


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் அடையாள போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சாா்பில் ஆசிரியா், ஆசிரியரல்லாத பணியாளா்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம், மாவட்டக் கருவூலம், மாவட்டக் கல்வி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...