தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சில்லக்குடி ஜல்லிக்கட்டு ரத்து காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் ஏமாற்றம்

பெரம்பலூா் அருகே சில்லக்குடியில் திங்கள்கிழமை (ஜன.17) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி, கரோனா தொற்றுப் பரவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:18 pm

DIN

பெரம்பலூா் அருகே சில்லக்குடியில் திங்கள்கிழமை (ஜன.17) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி, கரோனா தொற்றுப் பரவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. விழாக் குழுவினா் உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தனா்.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, சில்லக்குடியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி மறுப்பதாக மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பல லட்ச ரூபாய் செலவு செய்து போட்டிக்கான அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் மேற்கொண்டுள்ள நிலையில், போட்டியை ரத்து செய்ததால் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.