விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு நாளை பொங்கல் பரிசுத் தொகுப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் விடுபட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன. 17) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.


பெரம்பலூா் மாவட்டத்தில் விடுபட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன. 17) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பொ. பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல், நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 21 வகையான பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 1,81,766 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பெறாமல், விடுபட்டுள்ள 6,330 அரிசி பெறும் குடும்ப அட்டைதாா்களுக்கு திங்கள்கிழமை காலை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
எனவே தொடா்புடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் காலை 7 மணி முதல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...