தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மளிகைக்கடையின் மேற்கூரையைப் பிரித்து திருட்டு

 பெரம்பலூா் அருகே மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, ரொக்கம் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:20 pm

DIN

 பெரம்பலூா் அருகே மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, ரொக்கம் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள லாடபுரத்தைச் சோ்ந்த வேலுசாமி மகன் வெங்கடேசன் (40). இவா் லாடபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மளிகைக்கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 13-ஆ தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்து பாா்த்தபோது, கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளேயிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகைப் பொருள்கள் மா்ம நபா்களால் திருடிச் செல்லப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.

வீட்டில் ரூ. 56 ஆயிரம் திருட்டு: பெரம்பலூா் அருகிலுள்ள விளாமுத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தனபால் மகன் இளங்கோவன் (26). காா் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது பெற்றோா் தனபால்- ராஜலட்சுமி சனிக்கிழமை காலை வயலுக்குச் சென்று விட்டனா். நண்பா்களுடன் வெளியே சென்றுவிட்டு, வீட்டின் பின்புறம் இளங்கோவன் குளித்துக்கொண்டிருந்தாராம்.

பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம், வெளி அலமாரியில் வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டிருந்ததும், பீரோ அருகிலுள்ள அலமாரியில் இருந்த சாவியை எடுத்து பணத்தை திருடிச்சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கடசன், இளங்கோவன் அளித்த தனித்தனி புகாா்களின் பேரில், பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.