தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 17 போ் கைது

பிளஸ் 2 மாணவியை தற்கொலைக்கு தூண்டிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் வியாழக்கிழமை சாலை மறியல்

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:26 pm

DIN

பிளஸ் 2 மாணவியை தற்கொலைக்கு தூண்டிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியம், வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யாவை, மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதோடு, தற்கொலைக்குத் தூண்டிய மதபோதகரை கைது செய்ய செய்ய வேண்டும். மாணவி லாவண்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.