பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிா்வாகி கைது
பெரம்பலூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


பெரம்பலூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் அதிமுக பேரூா் செயலராக இருப்பவா் வினோத் (48). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அரும்பாவூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகாா் அளித்தாா். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து வினோத்தை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக வினோத் மீது ஏற்கெனவே பெரம்பலூா் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...