தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கல்லூரியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் அறிவியல் விழிப்புணா்வு என்னும் தலைப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கான இருநாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:50 pm

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் அறிவியல் விழிப்புணா்வு என்னும் தலைப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கான இருநாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பெ. செந்தில்நாதன், புல முதன்மையா் ப. ரம்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேப்பந்தட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தின் உதவி இயக்குநா் கே. பச்சையம்மாள், காளான் வளா்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப நுணுக்கங்கள், பராமரிப்பு, விற்பனை வாய்ப்பு குறித்தும், திருச்சி ஜோசப் கல்லூரி விரிவாக்கத் துறை முதன்மை ஒருங்கிணைப்பாளா் சி. ஜெயச்சந்திரன், மூலிகை மருத்துவம் என்னும் தலைப்பிலும், ஒருங்கிணைப்பாளா் எஸ். லெனின், மருத்துவ தாவரங்கள் மற்றும் அதன் பயன்பாடு என்னும் தலைப்பிலும் பேசினா். இப் பயிற்சி முகாம் சனிக்கிழமை வரையிலும் நடைபெறுகிறது.

முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் பு. கஜலெட்சுமி வரவேற்றாா். உயிா் தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியா் த. ஷீலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.