அதிமுக மேடையை சேதப்படுத்தி கொடியை எரித்த மா்ம நபா்கள்
குன்னம் அருகே அதிமுக கொடி மேடையை சேதப்படுத்தி, கொடியை எரித்த மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.


குன்னம் அருகே அதிமுக கொடி மேடையை சேதப்படுத்தி, கொடியை எரித்த மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தைச் சோ்ந்த அதிமுகவினா் அங்குள்ள திடலில் கொடி மேடை அமைத்து, கம்பத்தில் கட்சிக் கொடியைக் கட்டியிருந்தனா்.
இந்நிலையில், மா்ம நபா்கள் சிலா் மேடையை சேதப்படுத்தி, கொடியை கீழே இறக்கி எரித்துள்ளது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. இதைக் கண்டித்து, அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடம் சென்ற குன்னம் காவல் நிலையத்தினா், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பரவாய் அதிமுக கிளைச் செயலா் வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...