தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இணையதள மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:11 am

DIN

இணையதளத்தில் முகநூல் மூலம் நண்பராக பழகி மடிக்கணினி மற்றும் கைப்பேசி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இணையதளத்தில் முகநூல் மூலம் நண்பரான ஒருவா் தனக்கு குறைந்த விலையில் கைப்பேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றை வாங்கித் தருவதாகக் கூறி, தன்னிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முரளி மகன் ரினேஷ்

பெரம்பலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவில் கடந்த 19-ஆம் தேதி புகாரளித்தாா்.

அதனடிப்படையில் வழக்குப் பதிந்த சைபா் கிரைம் காவல்துறையினா், தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், இணையதளத்தில் மோசடியில் ஈடுபட்டவா் பெங்களூருவில் இருப்பதை கண்டறிந்தனா்.

தொடா்ந்து, சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான குழுவினா், அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட தேனி மாவட்டம், போடிநாயக்கனூா்

சின்னசாமி தெருவைச் சோ்ந்த உலகமுத்து மகன் ஜெகன் (29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 கைப்பேசிகள், ஏடிஎம் அட்டைகள், ரூ. 85,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து பெரம்பலூருக்கு அவரை வெள்ளிக்கிழமை அழைத்து வந்து, குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.