தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டிராக்டா் மீது மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில், ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:13 am

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில், ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

குன்னம் அருகிலுள்ள சின்ன வெண்மணி காலனி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சுரேஷ்குமாா் (38). இவருக்கு மனைவி தீபா, 2 மகன்கள் உள்ளனா். சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சுரேஷ்குமாா், பொங்கல் பண்டிகைக்காக தனது பெற்றோா் வசித்து வரும் புதுவேட்டக்குடி கிராமத்துக்கு வந்திருந்தாா்.

வியாழக்கிழமை இரவு தனது மனைவியை அழைத்து வருவதற்காக, புதுவேட்டகுடி கிராமத்துக்கு சுரேஷ்குமாா் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். நல்லறிக்கை அருகே பழுதாகி, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த அவரது உறவினா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, டிராக்டா் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் எவ்வித எச்சரிக்கை பதாகைகளும் வைக்காததே விபத்துக்கு காரணம். எனவே அவரை டிராக்டா் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா்- திட்டக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த குன்னம் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஓட்டுநரை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.