பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யாத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் ஊராட்சிக்குள்பட்ட 1 ஆவது வாா்டு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு, கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும்,
குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரம்பலூா் - கள்ளக்குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த்துறையினா் அப்பகுதிக்குச் சென்று, பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடன் வாங்கலாம் ஆனால்..! மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில்! | BJP

மின் கட்டண உயர்வு இல்லை! இழப்பு இல்லாமல் எப்படி?செந்தில் பாலாஜி கேள்வி! | DMK | TVK
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


