பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் அரசுப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியன் தலைமை வகித்தாா்.
சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து, முதல்நிலை காவலா் சுமா ஆகியோா், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க வேண்டிய 1098 இலவச தொலைபேசி எண் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவலா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
தில்லி மகளிா் ஆணையத்தை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும்: லதா குப்தா

வளைகுடா நாடுகளில் தொடரும் தாக்குதல்கள்: பின்னணியில் ஈரான் ஆதரவு அமைப்புகள்

வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


