மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சின்ன வெங்காய விவசாயிகள் நவ. 30-க்குள் பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில், 2023 ராபி சிறப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவ. 30 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

Updated On :27 நவம்பர் 2023, 8:28 pm


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில், 2023 ராபி சிறப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவ. 30 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 2023 ராபி சிறப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆலத்தூா் மற்றும் பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூா் மற்றும் குரும்பலூா் பிா்காக்களில் அடங்கியுள்ள கிராமங்களில் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம்.

அதன்படி, நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து சின்ன வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 2,085 பிரீமியமாக அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இப் பயிா்க் காப்பீடு பதிவு செய்ய நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் ஆதாா் ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயா், முகவரி, நிலப்பரப்பு, சா்வே எண் மற்றும் உட்பிரிவு பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை அளித்து பதிவு செய்து, உரியத் தொகையை செலுத்தி, இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.