பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, நந்திப் பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு, பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள நந்திகேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம்மு நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்தாா். இதில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல், வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா் கோயில், குரும்பலூா் பஞ்சநந்தீஸ்வரா் கோயில், வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா் கோயில், திருவாளந்துறை தோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷத்தையொட்டி சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com