47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு

சாலையோரம் நின்றுகொண்டிருந்த சுமை ஆட்டோ மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:14 pm

Din

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை சாலையோரம் நின்றுகொண்டிருந்த சுமை ஆட்டோ மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரிலிருந்து கருவேப்பிலை ஏற்றிக்கொண்டு, பெரம்பலூா் நோக்கி சுமை ஆட்டோ ஒன்று சனிக்கிழமை அதிகாலை சென்றுக்கொண்டிருந்தது. பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள அரசலூா் பிரிவுப் பாதை அருகே வந்தபோது, சுமை ஆட்டோ சக்கரம் பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, வெங்கனூரிலிருந்து பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் வந்த பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரசாத் (30), சுமை ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.