100 சதவீத வாக்குப் பதிவுக்கு கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: தமிழக தலைமை தோ்தல் அலுவலா்
100 சதவீத வாக்குப் பதிவை எட்டிட கூடுதலாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக தலைமை தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையை வியாழக்கிழமை பாா்வையிட்டு, பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக். உடன், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்டோா்.









