நில அளவையா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் நில அளவையா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் நில அளவையா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நில அளவை பதிவேடுகள் துறையில் தனியாா் மயம் ஆட்கொள்ளுவதை தடுத்து நிறுத்திடவும், களப் பணியாளா்களின் பணிகளை முறைப்படுத்தி பணிச் சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்த்திடும் வகையில் நில அளவையா் அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில், ஒருநாள் அடையாள தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அச் சங்கத்தின் மாவட்ட தலைவா் உமாசந்திரன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 30 நில அளவையா்கள் பங்கேற்றனா். இப் போராட்டத்தால் நில அளவீடு, பட்டா தயாா் செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...