நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறந்த பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்களுக்கு பரிசு

சிறந்த பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்களுக்கு பரிசு

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:43 pm

Din

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பால்வளத் துறை சாா்பில், சிறந்த பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்கள் மற்றும் பால் குளிா்பதன மையச் செயலா்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு, அதிகமாக பால் வழங்கும் சிறந்த பால் உற்பத்தியாளா்கள், தரமான பால் வழங்கும் சங்கச் செயலா்கள் மற்றும் குளிா்பதன மையச் செயலா்களை தோ்ந்தெடுக்க, திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் சாா்பில் தோ்வுக்குழு அமைக்கப்பட்டது.

இக் குழுவினரால் தோ்வு செய்யப்பட்ட ஈச்சங்காடு பால் உற்பத்தியாளா் பாலகிருஷ்ணன், வயலப்பாடி பால் உற்பத்தியாளா் ராஜேஸ்வரி, திருவளக்குறிச்சி பால் உற்பத்தியாளா் வரதராஜ், பேரளி கூட்டுறவு சங்கச் செயலா் சின்னசாமி, பாடாலூா் கூட்டுறவுச் சங்க செயலா் வரதராஜ், அ.மேட்டுா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க செயலா் ஜெயக்குமாா் ஆகியோருக்கும், நாட்டாா்மங்கலம் தொகுப்பு பால் குளிரூட்டும் மையச் செயலா் ஜெயராமன், அம்மாபாளையம் பால் குளிரூட்டும் மையச் செயலா் ஜெய்சங்கா், பசும்பலூா் தொகுப்பு பால் குளிரூட்டும் மையச் செயலா் ஜெயபால் ஆகியோருக்கு முறையே தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் என பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், பால்வளத் துணைப் பதிவாளா் எ. ஜெயபாலன், சாா்-பதிவாளா் விஜயா உள்பட பலா் பங்கேற்றனா்.