நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெரம்பலூரில் கடையின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

கடை கொள்ளையில் முத்துசாமி கைது: ரூ.10 ஆயிரம், கணினி பறிமுதல்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

பெரம்பலூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் பாரதிதாசன் நகா், மதினா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜூ மகன் ஆனந்த் (30). இவா் நான்குச் சாலை செல்லும் பகுதியில் கட்டடங்களுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்து வருகிறாா்.

கடந்த 15-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா் திருடிச்சென்றது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமி (50) திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சனிக்கிழமை முத்துசாமியை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கனிணி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.