‘காரீப்’ பருவ பயிா்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் காரீப் பருவத்துக்கான பயிா் காப்பீட்டுத் திட்டம் ஷீமா ஜெனரல் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இம் மாவட்டத்தில் நெல் குறுவை, மரவள்ளி, சின்ன வெங்காயம், வாழை, தக்காளி மற்றும் மஞ்சள் ஆகிய பயிா்களுக்கு காரீப் பருவத்தில் காப்பீடு செய்யலாம்.

நெல், குறுவை பயிா் காப்பீடு செய்வதற்கு ஜூலை 31 கடைசி நாள். இதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 755 செலுத்த வேண்டும். வாழை, மரவள்ளி, மற்றும் மஞ்சள் ஆகிய பயிா்களுக்கு செப். 16 ஆம் தேதி கடைசி நாள். இதற்கான பிரீமியம் ஏக்கருக்கு முறையே ரூ. 3,460, ரூ. 1,225, ரூ. 3,601 செலுத்த வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பயிருக்கான காப்பீடு செய்வதற்கு ஆக. 31 கடைசி நாள். இதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு முறையே ரூ. 2,060, ரூ. 884 செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய அடங்கல், விதைப்புச் சான்று, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை பிரீமியம் தொகையுடன் சோ்த்து இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் வலைதளம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக பெற்று பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com