உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்


பெரம்பலூா் மாவட்ட அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் கோபி முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் நிதி அறிக்கை வாசித்தாா். மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன், அரியலூா் மாவட்டச் செயலா் வெள்ளிவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் 17 அவசர ஊா்திகளுக்கும் பேட்டரிகளை முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியின் போது விபத்து ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்தால், அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மக்கள் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...