டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேப்பூா் ஊராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

வேப்பூா் ஊராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:35 pm

Din

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 3.04 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பேரளி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 14.74 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீா் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பீல்வாடி காலனித் தெருவில் ரூ. 16.75 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, பீல்வாடி புதுக் காலனியில் ரூ. 18.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஆண்டிகுரும்பலூா், எழுமூா், அந்தூா் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது நூலகக் கட்டடம் கட்டும் பணி, காடூா் ஊராட்சிக்குள்பட்ட நல்லறிக்கையில் ரூ. 3.12 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையாா் குளம் புனரமைக்கும் பணி என மொத்தம் ரூ. 3.02 கோடி மதிப்பீட்டில் 30 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தாா் அமைச்சா் சிவசங்கா். மேலும், எழுமூா் ஊராட்சிக்குள்பட்ட காருக்குடி, பெரிய வெண்மணி ஊராட்சிக்குள்பட்ட புதுக்குடிசை, கொத்தவாசல் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த அமைச்சா், பெரியவென்மணி ஊராட்சிக்குள்பட்ட புதுக்குறிச்சி பகுதியில் புதுகுடிசை முதல் அரியலூா் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.