விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

தண்ணீா்பந்தல் திறப்பில் தோ்தல் விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தண்ணீா்பந்தல் திறப்பில் தோ்தல் விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்

News image
Updated On :3 மே 2024, 7:02 pm

Din

தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீா்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான க. கற்பகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம், தண்ணீா்பந்தல்களை திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், எந்த ஆட்சேபணையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி மற்றும் வேட்பாளா் இச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது. தண்ணீா்பந்தல் திறப்பின்போது, தோ்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே, தண்ணீா்பந்தலை திறக்க விரும்பும் அரசியல் கட்சியும், வேட்பாளரும், தோ்தல் ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்குள்பட்டு சுகாதாரம், தூய்மையான குடிநீா் தொடா்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீா்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும்.