பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் நாள்தோறும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த 4 நாள்களாக பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது.

இதேபோல திங்கள்கிழமை காலை முதல் பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல, கோடை உழவு செய்த விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மின் தடை அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக, திங்கள்கிழமை மாலை ஆலம்பாடி சாலையில் ஏற்பட்ட மின்தடை சுமாா் 2 மணி நேரத்தும் மேலாக நீடித்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) செட்டிக்குளம்- 5, பாடாலூா்- 17, அகரம் சிகூா்- 4, புதுவேட்டக்குடி- 9, பெரம்பலூா்- 3, எறையூா்- 6, கிருஷ்ணாபுரம்- 4, வி.களத்தூா்- 5, வேப்பந்தட்டை- 9 என மொத்தம் 62 மில்லி மீட்டரும், சராசரியாக 5.64 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.