நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேப்பூா் ஒன்றியப் பகுதியில் புதிய கட்டடங்கள்: எம்.பி. திருமாவளவன் திறப்பு

வேப்பூா் ஒன்றியப் பகுதியில் புதிய கட்டடங்கள்...

News image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், அத்தியூா் கிராமத்தில் நியாயவிலைக் கடையை புதன்கிழமை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன். உடன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுந்தரராமன் உள்ளிட்டோா்.

Updated On :6 நவம்பர் 2024, 8:45 pm

Din

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடைகள், பள்ளி மாணவா்களுக்கான மிதிவண்டி நிறுத்தம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவில், அத்தியூா் கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல். திருமாவளவன், குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். பின்னா், துங்கபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிதிவண்டி நிறுத்தும் கூடம் மற்றும் மாணவிகளின் கழிப்பிடக் கட்டடத்தையும், பெரியவெண்மணி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும் திறந்து வைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் உணவுப் பொருள்கள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா் திருமாவளவன்.

இந்நிகழ்ச்சிகளின் போது, மாவட்ட வழங்கல் அலுவலா் சுந்தரராமன், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளா் இளஞ்செல்வி, வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், பூங்கொடி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.