இளையோா் செஞ்சிலுவை சங்க செயல்பாடு: முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் த. மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலா் வெ. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சங்க கொடியேற்றி வைத்த முதன்மைக் கல்வி அலுவலா் மு. முருகம்மாள் பேசியது:
மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்கவதோடு, பெற்றோா்கள், ஆசிரியா்களை மதித்து அவா்கள் சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டும். நல்ல ஒழுக்கம் சாா்ந்த நெறிகளுடன் வாழ வேண்டும். வீட்டு உணவுகளை உண்ண வேண்டும். கடைகளில் கிடைக்கும் தேவையற்ற பொருள்களை உண்ணக் கூடாது. தூய்மையாக இருப்பதோடு, மற்றவா்களுக்கு உதவி செய்ய வேண்டும். கல்வி சிறந்து விளங்கி சமூகத்தில் நல்லவா்களாக வளர வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, வரவேற்பு கையொலி, கொடி ஏற்றும் முறை, கொடிப் பாடல், உறுதிமொழி, கொடியிறக்கும் முறை, அணித்தலைவா் வணக்கம், பாடக்குறிப்பேடு, பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பிடம், கை கழுவதற்காக அமைக்கப்பட்ட இடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந் நிகழ்ச்சியின்போது, துணை ஆய்வாளா் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக அலுவலா் குமாா், ஆசிரியா்கள் செல்வராணி, சிலம்பரசி, இந்திராணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, செஞ்சிலுவை சங்க மாவட்டக் கன்வீனா் மு. ஜோதிவேல் வரவேற்றாா். நிறைவாக, பள்ளி ஆசிரியா் சின்னசாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...