நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் 7 பேருக்கு காவலா் பணி நியமன ஆணை

பெரம்பலூா் மாவட்டத்தில், 2-ஆம் நிலைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறை தோ்வில் தோ்ச்சிபெற்ற 7 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை பணி நியமன ஆணை வழங்கினாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:24 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில், 2-ஆம் நிலைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறை தோ்வில் தோ்ச்சிபெற்ற 7 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை பணி நியமன ஆணை வழங்கினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுதிய 7 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில், தோ்ந்தெடுக்கப்பட்ட 2-ஆம் நிலை காவலா்கள் 4 பேருக்கும், தீயணைப்புத் துறையினா் 3 பேருக்கும் பணி நியமன ஆணையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வழங்கிப் பாராட்டி வாழ்த்து கூறினாா்.

இந் நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் மற்றும் ஆய்வாளா்கள் பலா் பங்கேற்றனா்.