முதல்வரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்துக்கு முயன்ற 9 வழக்குரைஞா்கள் கைது

வழக்குரைஞா்கள் கைது...
Published on

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸை இழிவாகப் பேசிய தமிழக முதல்வரைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 வழக்குரைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே, சமூக நீதிப் பேரவை வழக்குரைஞா்கள் சாா்பில், தொழிலதிபா் அதானி குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள வழக்கு குறித்து விளக்கம் கேட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸை, இழிவாகப் பேசிய தமிழக முதலமைச்சரைக் கண்டித்து, மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூா் போலீஸாா் காா்த்திகேயன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து மாலையில் விடுவித்தனா்.